பாஜக - அதிமுக இணைந்தது ஏன்? உண்மையை போட்டுடைத்த EPS...!
அதிமுக - பாஜக கூட்டணி இணைந்ததற்கான காரணத்தை அதிமுக பொதுச்செயலாளர் மக்களிடம் எடுத்துரைத்தார்.
தமிழக அரசியல்களம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் மே 04ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனை போட்டி நிலவி வருவதால் தமிழக அரசியல் சூடுபிடித்து இருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் வெற்றிக்காக மக்களிடம் தீவிர இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: இன்னும் 4 நாட்களில்.. தேதி குறித்த எடப்பாடி பழனிச்சாமி.. ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா.!
தீவிர வாக்குசேகரிப்பு:
அனல்பறக்க சூறாவளி பிரச்சாரம் தொடரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக & என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார்.

பாதியில் நிற்கும் பாலம்:
இந்த பிரச்சாரத்தின்போது பேசிய அவர், "மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவே அதிமுக - பாஜக கூட்டணி இணைந்துள்ளது. அதுவே எங்களின் ஒரே நோக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் தொகுதிக்கு திமுக எந்த ஒரு முன்னேற்ற பணியையும் செய்து கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்தபோது அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் மட்டுமே இங்கு இருக்கின்றன. திமுக ஆட்சியில் தொடங்கிய பாலம் பாதியில் தான் நிற்கிறது" என கூறினார்.
நான் பார்க்கவில்லையே??
தொடர்ந்து பேசிய அவர், "தொகுதி வரையறை விஷயத்தில் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என வீடுகளில் கறுப்புக்கொடி கட்டச் சொன்னார். ஆனால், நான் வரும் வழிகளில் ஒரு கருப்புகொடிகூட தெரியவில்லை. ஸ்டாலின் பேச்சுக்கள் அனைத்தும் பொய் என்பதற்கு சாட்சி இதுதான். தமிழக சட்டப்பேரவை தேர்தலை டெல்லிக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையேயான போட்டி என மு.க. ஸ்டாலின் சொல்கிறார். நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல். மக்களுக்கான அடிப்படை விஷயம் கூட தெரியாதவர் முதல்வராக இருக்கிறார்" என பேசினார்.
இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!