ஊரடங்கு தளர்வு! எந்த கடைகள் எல்லாம் திறப்பதற்கு அனுமதி? மகிழ்ச்சியில் பொதுமக்கள்!



Whic shops open from today

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால், 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், தனி கடைகள் இன்று(திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

அதில், தமிழக அரசு, கடைகள், தொழிற்சாலைகள் சில நிபந்தனைகளுடன் திறக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. எந்தெந்த கடைகள் திறக்க வேண்டும்; எப்போது வரை திறந்து இருக்கலாம் என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

144

கடைகளை பொறுத்தவரை, கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள் திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் வழக்குப்பதிவு செய்யப்படும். விதிமுறைகள் மீறப்படுகிறதா என போலீசார் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பல கடைகள் திறக்கப்பட உள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.