தமிழகம் Covid-19

கைகளால் தொடாமல் கைகளை கழுவும் புதிய டெக்னிக்! திருவான்மியூரில் திறந்து வைத்தார் நடிகை கௌதமி!

Summary:

washing hands without touching hands

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மட்டுமல்லாது ஒருசில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.

அவ்வாறு மக்கள் அதிகம் கூடும் திருவான்மியூர் மார்க்கெட்டில் கைகளால் தொடாமலே கைகளை கழுவும் புதிய வழிமுறையை நடிகை கௌதமி இன்று திறந்து வைத்துள்ளார். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்க தொட்டியினை Young Indians (YI) என்ற தொண்டு நிறுவனம் நிறுவியுள்ளது.

அந்த நீர்த்தேக்க தொட்டியின் நான்கு புறத்திலும் இருந்து மக்கள் கைகளை கழுவிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நான்கு புறத்திலும் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் சிறப்பு அம்சம் என்னவெனில் எதையும் மக்கள் கைகளால் தொட தேவையில்லை.

மாறாக அனைத்தையுமே காலின் மூலம் இயக்கும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது. சானிடைசர் மற்றும் தண்ணீரை பெற அடியில் தரப்பட்டுள்ள கம்பிகளை காலால் அழுத்தினாள் போதும். மார்கெட்டிற்கு வந்து செல்லும் மக்கள் பயம் இல்லாமல் சுகாதாரமாக திரும்பி செல்ல இந்த வசதி பெரிதும் உதவியாக இருக்கும்.


Advertisement