Virudhuangar: 'இறப்பிலும் இணைபிரியாத தம்பதி'.. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மரணம்.. கண்ணீரில் உறவினர்கள்.!



Virudhunagar Tragedy Wife Dies of Shock After Husband’s Death in Sivakasi

வயோதிக தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், செல்லியாரம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மீனாட்சி சுந்தரம் (வயது 84). இவரின் மனைவி லட்சுமி (வயது 76). சுந்தரம் சைக்கிளில் சென்று ஊறுகாய் விற்பனை செய்து வியாபாரம் பார்த்து வந்துள்ளார். தம்பதிகளுக்கு மகள், 2 மகன்கள் இருக்கின்றனர். 

இயற்கை எய்தினார்:
இதனிடையே, வயது மூப்பு காரணமாக கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சுந்தரம், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் அவர் இயற்கை எய்தினார். இதனால் கணவரை பிரிந்த துக்கத்தில் லட்சுமியும் கண்ணீருடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 'நீ போன இடத்துக்கு நானும் வாரேன்' கணவன் இறந்த துக்கத்தில் மனைவி விபரீதம்.. கண்ணீரில் உறவினர்கள்.!

Virudhunagar

கண்ணீரில் உறவினர்கள்:
அவரை உறவினர்கள் சமாதானம் செய்து வந்தனர். இதனிடையே, இறுதிச்சடங்கு பணிகளின்போது மூதாட்டி லட்சுமியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் தம்பதியின் உடலுக்கு உறவினர்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். புத்தாண்டு நாளில் கணவர் உயிரிழக்க, மனைவியும் உயிரை விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை ஒரே நேரத்தில் இழந்த துக்கத்தில் இருவரும் தவித்துப்போயினர்.