திமுக - தேமுதிக தொண்டர்கள் இடையே மோதல்.. திமுகவினரின் பகீர் செயலால் போர்க்கொடி.!

திமுக - தேமுதிக தொண்டர்கள் இடையே மோதல்.. திமுகவினரின் பகீர் செயலால் போர்க்கொடி.!


virudhunagar-sivakasi-26-th-ward-dmk-dmdk-workers-clash

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியாக சிவகாசி, தனது முதல் நகராட்சி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. மேலும், வாக்காள பெருமக்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினர். 

இந்நிலையில், சிவகாசி 26 ஆவது வார்டுக்கு இரத்தின விலாஸ் பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்களிக்க வந்த மக்களிடம் இறுதிக்கட்டத்தில் திமுக மற்றும் தேமுதிக கட்சியின் ஆதரவாளர்கள் ஆதரவு திரட்டிக்கொண்டு இருந்தனர். 

sivakasi

அந்த சமயத்தில், தேமுதிக ஆதரவாளரை திமுகவினர் கீழே தள்ளிவிட்டதாக தெரியவருகிறது. இதனால் தேமுதிகவினர் வாக்குவாதம் செய்து, வேலாயுதம் ரஸ்தா பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்படவே, காவல் துறையினர் தேமுதிகவினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.