தமிழகம்

இராஜபாளையம்: 12 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம்.. குடிகார கும்பல் வெறிச்செயல்..!

Summary:

இராஜபாளையம்: 12 வயது சிறுமி 2 பேரால் பாலியல் பலாத்காரம்.. குடிகார கும்பல் வெறிச்செயல்..!

பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய மாணவியை, மதுபோதையில் இருந்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இராஜபாளையம் அருகே நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், தொம்பக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 6 ஆம் வகுப்பு பயின்று வரும் 12 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த 2 பேர், மாணவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டல் விடுத்த இருவரும், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பயத்துடன் வீட்டிற்கு சென்ற சிறுமி கவலையுடன் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் மகளை கவனித்து என்ன என்று விசாரணை செய்துள்ளனர். சிறுமி பயத்தில் இருந்ததால், உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்துள்ளார். 

கடந்த 2 நாட்களாக சிறுமியும் கவலையுடன் இருக்கவே, மகள் உடல்நலக்குறைவு சரியாகவில்லை என்று நினைத்த பெற்றோர், அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை உணர்ந்த மருத்துவர்கள், சிறுமியின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள், இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு மாணவியின் வாக்குமூலப்படி 3 perai சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணைக்கு பின்னர், இதே பகுதியை சார்ந்த வெங்கடேச பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Advertisement