கள்ளக்காதல் காமத்தால் பறிபோன உயிர்.. விடுதி அறையில் விண்ணுலகம் அனுப்பிய காதலி.!Virudhunagar Man Killed by Affair Girl 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவரின் மனைவி செல்வராணி. இவர்களின் மகன் காசி விஸ்வநாதன் (வயது 27). இவர் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூரில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து தாய்-தந்தை, நண்பர்களை சந்திப்பது வழக்கம். 

இதனிடையே, விஸ்வநாதன் திருப்பூரில் திருமணமாகி விவாகரத்து பெற்ற நந்தினி (வயது 22) என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். கடந்த ஜூன் 13 அன்று விஸ்வநாதன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின் லாட்ஜில் அறையெடுத்து நந்தினியுடன் தங்கி இருக்கிறேன் என தாயிடம் கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்; கள்ளகாதலால் சோகம்.!

வாயில் பேண்டேஜ் வைத்து அழுத்தி கொலை

பின், ஜூன் 14 அன்று இரவு 9 மணியளவில் காசி விஸ்வநாதன் விடுதி அறையில் மூக்கில் ரத்தம் வழிந்தவாறு மரணமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்தேக மரணம் என்ற பெயரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விடுதியில் வைத்து காசி விஸ்வநாதன் - நந்தினி இடையே ஏற்பட்ட தகராறில், காசியின் வாயில் பேண்டேஜ் வைத்து அழுத்தி நந்தினி காசியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, நந்தினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: தாயின் ஆண் நண்பர் தலையில் கல்லைப்போட்டு கொலை; சொல்லச்சொல்ல கேட்காததால் விபரீதம்.!