தோட்டத்தில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!Virudhunagar Man Died Electrocution 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்ரியபட்டி பகுதியில் வசித்து வருபவர் மாரிச்சாமி (வயது 57). இவரின் மனைவி மைசூர். தம்பதிகளின் மகன் துபையில் பணியாற்றி வருகிறார். மகள் ஹரிணி தேவி, அங்குள்ள கல்லூரி படித்து வருகிறார். 

தோட்டத்தில் குளிக்கச்சென்றவர்

இதனிடையே, நேற்று மாரிசாமி குளிப்பதற்கு தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரின் செல்போனுக்கு மகள் பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதனால் பதறியபடி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கணவன் - மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; திடீர் மழையில் அறுந்த மின்கம்பியால் சோகம்.!

மின்சாரம் தாக்கி சோகம்

இதனையடுத்து, உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, மாரிசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஹரிணி தேவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை; நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!