
தமிழகமே அதிர்ச்சி.. பெற்றெடுத்த மகளை ஒரு வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்த தந்தை.. அதிரவைக்கும் வாக்குமூலம்.. விருதுநகரில் பயங்கரம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லல்பட்டி கிராமத்தை சேர்ந்த 43 வயது நபர், தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தம்பதிக்கு 14 வயதுடைய, 13 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தம்பதியின் மூத்த மகள் சோகமாகவே வகுப்பறையில் இருந்து வந்த நிலையில், ஆசிரியை அவரின் நோட்டை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, அதில் "இனி வாழக்கூடாது" என எழுதியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ந்த ஆசிரியை மாணவியிடம் விசாரிகையில், எனக்கு வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவரிடம் மனம்விட்டு விசாரணை செய்தபோது, சிறுமியின் தந்தை செய்த கொடூர செயல்கள் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், மாணவியின் பெற்றோர் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வருவார்கள். அக்கா, தங்கை இருவரும் ஒன்றாக பள்ளி சென்று வந்துள்ளனர். மாணவி உடல்நலம் பாதித்து வீட்டில் இருக்கும்போது, அவரின் தந்தையும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, தான் பெற்றெடுத்த மகள் என்றும் பாராது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தினமும் தாய் உறங்கியதும் மகளுக்கு பாலியல் தொல்லையை கொடுத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், சிறுமி மறுப்பு தெரிவித்தபோது அடித்தும், தாய் மற்றும் தங்கையை கொலை செய்திடுவேன் என மிரட்டியும் பணிய வைத்திருக்கிறான்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறுமி அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த திடுக்கிடும் தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாயிடம் புகாரை பெற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement