தமிழகம்

அனுமதி வழங்காவிட்டால் தடையை மீறி நடத்துவோம் !உண்ணாவிரதத்தில் இறங்கிய இந்து முன்னனியினர்!

Summary:

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்க்கு அரசு தடை விதித்துள்ளது..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து வந்துள்ளது.இதனையடுத்து ,தற்பொழுது விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு தடை விதித்து வருகிறது.இதனால் பல தரப்பினர் அரசிடம், விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி கோரி கோரிக்கை விடுவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று இந்து முன்னனியர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டம், மாநில தலைவரான காடேஸ்வரா சி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது .இந்த அமைப்பின் பொது செயலரான பக்தவச்சலம்,சென்னை மாநகர தலைவரான இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், உண்ணாவிரதத்தின்போது சி.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தற்பொழுது பள்ளிகள்,மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரும் நடக்கிறது. இதற்கெலாம் அனுமதி வழங்கிய தமிழக அரசு விநாயர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு போடப்பட்டுள்ள தடையை அகற்றி, விழா கொண்டாடுவதற்க்கு அனுமதி வழங்க வேண்டும். அனுமதிக்காவிட்டால்  தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என கூறினார்.


Advertisement