10 அடி ஆழ குழியில் விழுந்த 3 வயது சிறுமி..! மின்னல் வேகத்தில் மீட்டு நெகிழ வைத்த இளைஞர்கள்! குவியும் வாழ்த்துக்கள்..!

Vilupuram girl fall into 10 feet pit


vilupuram-girl-fall-into-10-feet-pit

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்றும் யார் மனதில் இருந்தும் நீங்கவில்லை. இந்நிலையில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்த்திவார குழியில் 3 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் - புதுவை சாலையில் சின்னபாபு சமுத்திரம் என்னும் பகுதியில் சரோஜா என்பவர் வீடு கட்டுவதற்கா 10 அடி ஆழமும், 1 அடி அகலமும் கொண்ட அஸ்த்திவார குழி ஒன்றை தோண்டியுள்ளார். குழியில் கான்க்ரீட் போடுவதற்கு காலதாமதம் ஆனதால் குழியை மூடாமல் அப்படியே வைத்துள்ளனனர்.

Sujith

இந்நிலையில் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த ஸரோஜாவின் 3 வயது மகள் அந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த இளைஞர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அருகில் மற்றொரு குழியை தோண்டி 15 நிமிடங்களில் குழந்தையை மீட்டுள்ளனர்.

தீயணைப்பு துறை வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல், துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.