திமுக - அதிமுக தொண்டர்கள் பயங்கர மோதல்..! மரக்காணம் அருகே பரபரப்பு.!

திமுக - அதிமுக தொண்டர்கள் பயங்கர மோதல்..! மரக்காணம் அருகே பரபரப்பு.!


Viluppuram Marakkanam Election DMK AIAMDK Workers Clash

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பேராட்சியில் அழகன்குப்பம், வசவன்குப்பம் மீனவ கிராமங்கள் உள்ளது. பேரூராட்சி 1 ஆவது வார்டில் திமுக சார்பில் விக்னேஷ் மற்றும் அதிமுக சார்பில் பாண்டியன், சுயேட்சையாக வேலு ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் சுயேச்சை வேட்பாளர் வேலு வெற்றியை தொடர்ந்து திமுகவில் இணைந்துள்ளார். 

இந்நிலையில், வேலுவின் வெற்றிக்கு வசவன்குப்பம் மீனவர் பகுதியில் வசித்து வரும் திமுக மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாபு காரணம் என்று கூறி, அப்பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் 20 பேர் தடி மற்றும் இரும்பு கம்பி உட்பட பயங்கர ஆயுதத்துடன் பாபுவின் வீட்டினை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியுடன் பாபு வீட்டிற்கு வெளியே வந்த நிலையில், அதிமுக ஆதரவாளர்கள் பாபுவை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். படுகாயமடைந்த பாபுவை மீட்க அவரின் ஆதரவாளர்கள் பரத் குமார், தமிழ் மணி, வினோத், அருள் குமார் ஆகியோர் வந்த நிலையில், அவர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

Viluppuram

சம்பவ இடத்திற்கு விரைந்த பாபுவின் ஆதரவாளர்கள் சந்திரனின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்த, இருதரப்பிலும் பலரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மரக்காணம் காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் திட்டத்துடன் இருந்த இருதரப்பும் தப்பி சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பும் மரக்காணம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.