தமிழகம் Corono+

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்குச் சென்ற இளைஞன்! இளைஞன் செய்த செயலால் பாராட்டும் கிராம மக்கள்!

Summary:

village people appriciate young boy

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சம், ஊரடங்கு போன்ற காரணங்களால் சென்னையில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பலர் சென்னையில் வேலை இல்லாத காரணத்தாலும் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். 

இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞன் சென்னைக்கு சென்றுள்ளார். சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பை அறிந்த அவரது குடும்பத்தினர். உனக்கு வேலை போனாலும் பரவா இல்லை நமது ஊருக்கு வந்துவிடு மகனே என அவரது பெற்றோர்கள் தொலைபேசியின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தாய், தந்தையை பிரிந்து சென்னையில் வசித்து வந்த தினேஷ், தனது இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச்சென்றார். கடந்த 20 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு சென்ற தினேஷ் தனது கிராமத்திற்கு செல்லாமல் புதுக்கோட்டையில் ஒரு போலீசாரிடம் நான் சென்னையில் இருந்து வந்துள்ளேன். நான் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் உதவுங்கள் என கேட்டுள்ளார்.

தானாக முன்வந்து சமூக அக்கறையுடன் கேட்கும் அந்த இளைஞனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த போலீஸ் தினேஷ் என்ற இளைஞனை மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளார். மேலும் சோதனை முடிவு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை நீங்கள் தனது அறையில் தங்கி இருந்து விட்டு, பரிசோதனை முடிவு வந்தவுடன் பார்த்துவிட்டு செல்லலாம் என கூறி அந்த காவலர் அவரது அறையில் தங்கவைத்துவிட்டு, அவர் பிற போலீசாருடன் தங்கியுள்ளார். தினேஷிற்கு செய்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

இதனையடுத்து, தனது வீட்டிற்கு போன் செய்த அந்த இளைஞன், நான் பரிசோதனை செய்து விட்டேன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நான் மேலும் 15 நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு வீட்டிற்கு வருகிறேன் என கூறி, அந்த காவலரின் அறையிலே மொத்தம் 18 நாட்கள் தங்கிவிட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார் தினேஷ். சமூக அக்கறையுடன் செயல்பட்ட அந்த இளைஞரை பாத்தம்பட்டி கிராம மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே வாருங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.


Advertisement