நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
மலைக்கோட்டை பிள்ளையார்! அனல் பறக்கும் தவெக தலைவர் விஜயின் பேச்சு! 2026 தேர்தலுக்காக அதிரடி தேர்தல் வாக்குறுதிகள்!
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய், திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். பெரும் ரசிகர் ஆதரவோடு நடைபெற்ற இந்த நிகழ்வு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
திருச்சியில் உற்சாக வரவேற்பு
இன்று காலை திருச்சி வந்தடைந்த விஜய்க்கு, தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் கடந்து, அவர் மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்தார். இது, அவரது அரசியல் பயணத்தின் முதல் பெரிய கட்டமாக கருதப்படுகிறது.
முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு
2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ள நிலையில், அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் திருச்சியில் நடந்த பிரச்சாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: உடல் முழுவதும் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி ! மேளம் அடித்து விஜய்யை வரவேற்ற தொண்டர்! வைரலாகும் வீடியோ....
விஜயின் உரை மற்றும் வாக்குறுதி
திருச்சியில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசியது: "திருச்சி மதச்சார்பின்மைக்கும் கொள்கைக்கும் அடையாளம். மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாரின் மண் என்பதால் எனக்கு மிகுந்த உணர்ச்சி தொடர்பு உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகப் போர்." என்றும் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பில் No compromise என்று உறுதியளித்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்தால், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் செயல்படுத்துவோம் என்றார்.
திருச்சியில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பு, அவரது அரசியல் வருகை எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தப் போகிறது என்பதை முன்னரே காட்டுகிறது. இது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலைக்கான முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் டைலாக்கை சொன்ன தொண்டர்கள்! கேட்கல, கேட்கல, இன்னும் சத்தமா! விஜய் பேசும்போது திடீரென ஏற்பட்ட பரபரப்பு...