விஜய் டைலாக்கை சொன்ன தொண்டர்கள்! கேட்கல, கேட்கல, இன்னும் சத்தமா! விஜய் பேசும்போது திடீரென ஏற்பட்ட பரபரப்பு...



vijay-trichy-campaign-traffic-rally

திருச்சியில் இன்று நடைபெற்ற விஜயின் பிரச்சாரம் பெரும் வரவேற்பும் பரபரப்பும் மத்தியிலும் தொடங்கியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் நகரம் முழுவதும் விழாக்கோலம் எடுத்து இருந்தது.

விமான நிலையத்திலேயே வரவேற்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காலை திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு முதலே தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முதல் மரக்கடை வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டமாகச் சென்று கொண்டிருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஐந்து மணி நேர பயணம்

விஜய் தனது பிரச்சார வாகனத்தில் ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு திருச்சி மரக்கடை பகுதியை அடைந்தார். வழியெங்கும் தொண்டர்கள் கடல் அலைபோல் திரண்டதால் நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: அதிரடி சலுகை! புதிய பெட்ரோல் நிலையத்தில் 2 லிட்டர் வாங்கினால் 2 லிட்டர் இலவசம்! வாகன ஓட்டிகள் வரிசையில்.. புதுக்கோட்டையில் பரபரப்பு!

மைக் கோளாறால் பரபரப்பு

விஜய் பிரச்சாரத்தை தொடங்கியபோது மைக் இயங்காமல் போனதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அவரது பேச்சை தெளிவாகக் கேட்க முடியாததால் தொண்டர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். இதனால் நிகழ்ச்சி சில நேரம் பரபரப்புடன் நடந்தது.

திருச்சியில் விஜயின் பிரச்சாரம் தொடங்கிய தருணமே மிகப்பெரிய அரசியல் அலைவை ஏற்படுத்தி, தொண்டர்களின் பேராதரவை வெளிப்படுத்தியிருக்கிறது. அடுத்த கட்ட தேர்தல் பரப்புரைக்கான தொடக்கம் திருச்சியில் இருந்து வலிமையாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: உடல் முழுவதும் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி ! மேளம் அடித்து விஜய்யை வரவேற்ற தொண்டர்! வைரலாகும் வீடியோ....