நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
BREAKING: சென்னை புழல் மத்திய சிறையில் தமிழக முதல்வர் விஜய் திடீர் ஆய்வு !!!
சென்னை புழல் மத்திய சிறையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை நிர்வாகிகளுடன் சிறைக்கு சென்ற அவர், கைதிகளின் நிலை மற்றும் அங்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, கைதிகளுக்கான உணவு தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட முதலமைச்சர், உணவு தயாரிக்கப்படும் சமையலறையையும் நேரில் பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்படும் உணவு தயாரிப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலன் வீட்டு முன்பு கள்ளக்காதலி கொலை.. அரங்கேறிய வெறிச்செயல்.. பதறிய பொதுமக்கள்.. ஈரோட்டில் சோகம்.!
சமையலறை, மருத்துவ வசதிகளை நேரில் ஆய்வு
இதைத்தொடர்ந்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ வசதிகளையும் விஜய் பார்வையிட்டார். கைதிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் முறையாக கிடைக்கிறதா, அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
புழல் சிறை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு
முதலமைச்சரின் திடீர் வருகையை முன்னிட்டு புழல் மத்திய சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆய்வு முடிந்த பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.