அரசியல் தமிழகம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்ற விஜய்சேதுபதி.!

Summary:

சென்னை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் உயிரிழந்த நிலையில், முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ஆம் தேதி காலமானார். அவரின் இறுதி சடங்கு முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி நேற்று சென்று அவரின் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தாயார் உருவப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி 800 பட விவகாரம் குறித்து கேட்ட போது, நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டது, இதை பற்றி பேசுவதற்கு இனி ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.


Advertisement