என்ன நினைச்சாரோ? தந்தையின் அன்பு இதுதான்.. திடீரென கண்கலங்கிய முதல்வர் விஜய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!



vijay-kamarajar-breakfast-scheme-students-emotional-mom

தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை திருவான்மியூர் காந்திகிராமம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து காலை உணவும் அருந்தினார்.

மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய விஜய்

திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பள்ளியின் பல்வேறு வகுப்பறைகளுக்கும் விஜய் சென்றார். அப்போது மாணவர்களிடம் இயல்பாகப் பேசிய அவர், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாணவர்கள் தண்ணீர் கேட்டபோது, உடனடியாக அவர்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். பின்னர் குழந்தைகளுடன் சகஜமாக அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார்.

இதையும் படிங்க: BREAKING : சற்று முன்... இன்ப அதிர்ச்சி.! ஒரே மாதத்தில்2-வது முறை... பால் விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஷ் சொன்ன முதல்வர் விஜய்!!!

குழந்தைகளை கவனித்த முதல்வர்

காலை உணவை மாணவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, பள்ளியிலிருந்து வெளியே வந்த விஜய் திடீரென கண்கலங்கியதாக கூறப்படுகிறது. குழந்தைகள் பசியின்றி உணவருந்தியதை பார்த்த தருணம் அவரை உணர்ச்சிவசப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எக்ஸ் தளத்தில் வைரலாகும் வீடியோ

மாணவர்களுடன் விஜய் கலந்துரையாடிய காட்சிகளும், அவர் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களும் இடம்பெற்றதாக கூறப்படும் வீடியோ தற்போது எக்ஸ் தளத்தில் கவனம் பெற்று வருகிறது. குழந்தைகளின் பசி தீர்ந்ததை பார்த்த அந்த நொடியை, ஒரு தலைவரின் பொறுப்புணர்வுடன் மட்டுமல்லாமல் தந்தையின் அன்போடும் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,454 பள்ளிகளில் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: #BREAKING: சற்று முன்... குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! முதல்வர் விஜய்யின் சூப்பர் அறிவிப்பு..!!!