சர்க்கார்: தேனியில் நள்ளிரவில் தாக்கப்பட்ட விஜய் ரசிகர்; சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆயிடுமோ!

சர்க்கார்: தேனியில் நள்ளிரவில் தாக்கப்பட்ட விஜய் ரசிகர்; சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆயிடுமோ!



vijay-fan-attacked-in-theni

தேனியில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது. அவை அனைத்தையும் உடைத்தெறிந்து தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனைப் படைத்து வரும் சர்க்கார் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறது ஆளும் அதிமுக அரசு. 

இதற்கு காரணம் படத்தில் பல இடங்களில் ஆளும் அதிமுக கட்சியை தாக்கி இழிவாக பேசுவது போல் காட்சிகள் அமைந்துள்ளது தான். மற்றும் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமியின் பெயர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்று வைத்தள்ளனர். இது படத்தின் வில்லியாக ஜெயலலிதாவை சித்தரிப்பது போன்று உள்ளதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, மதுரை, கோவை நகரங்களில் பல திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிளிக்கப்பட்டன. 

Vijay fan attacked in theni

குறிப்பாக இந்த படத்தில் தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது அரசின் திட்டங்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி படத்திற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அமைச்சர்கள் கூறியள்ளனர். 

இந்நிலையில் நள்ளிரவில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாக விக்னேஷ் ஹரி என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தாக்கப்பட்ட அந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் அந்த நபர் பதிவிட்டுள்ளார். 

இதனை ரீடுவீட் செய்துள்ள நடிகர் கார்த்தி "சட்ட ஒழுங்கு பிரச்சினை ஆகிவிடுமோ!" என பதிவிட்டுள்ளார். 

Vijay fan attacked in theni