அரசியல் தமிழகம் சினிமா TN Election 2021

ஓ!! ஓட்டுப்போட விஜய் சைக்கிளில் வர இதுதான் காரணமாமே!! வைரலாகும் வீடியோ.. பிஆர்ஓ விளக்கம்..

Summary:

ஓட்டு போடுவதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஓட்டு போடுவதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் வாக்கு பதிவு மையத்திற்கு சென்று, தங்கள் வாக்கினை பதிவு செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய், தனது வாக்கினை பதிவு செய்வதற்காக அவரது வீட்டில் இருந்தே சைக்கிளில் கிளம்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பிய நடிகர் விஜய், தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றார்.

Thalapathy Vijay cycle entry from his house goes viral

விஜய் சைக்கிளில் வருவதை அறிந்த ரசிகர்கள், இருசக்கர வாகனம் மூலம் அவரை பின்தொடர ஆரம்பித்தனர். இதனால் அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தபிறகு, விஜய் தனது கார் ஓட்டுனரின் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றார்.

விஜய் ஏன் சைக்கிளில் சென்றார் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதேநேரம் இதற்கு பின்னால் அரசியல் காரணம் ஏதேனும் உள்ளதா என்பது பற்றியும் விவாதம் நடந்தது. ஆனால் , "நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததற்கு எவ்வித அரசியல் காரணங்களும் இல்லை எனவும், வாக்குச்சாவடி வீட்டிற்கு அருகே உள்ளது என்பதால்தான் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்ததாக விஜய்யின் பிஆர்ஓ விளக்கமளித்துள்ளார்.".


Advertisement