வடக்கனும், கிழக்கனும்.. பெருகி வரும் வடக்கன்ஸ் சர்ச்சைக்கு நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்த பக்கா பதிலடி!!



vijay-antony-tweet-for-vadakkans-issue

தமிழ் சினிமாவில் பாடகராக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்து பின் ஹீரோவாக அவதாரமெடுத்து வித்தியாசமான தனது படத்தால், சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன், கொலை, ரத்தம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 திரைப்படமும் மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

இதற்கிடையில் பிச்சைக்காரன் 2 ஷூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அவ்வப்போது தான் குணமடைந்து வருவதாக உடல்நலம் குறித்து சமூக வலைத்தளப்பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். இதற்கிடையில் சமீப காலமாக தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாகவும், அவர்கள் தமிழர்களை தாக்கி அடக்குவதாகவும் பலதரப்பான கருத்துக்கள் பரவி வருகிறது. மேலும் அவர்களுக்கு எதிராக பல மீம்ஸ்களும் பரவி வருகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில், வடக்கனும், கிழக்கனும், தெற்க்கனும், மேற்க்கனும்.. நம்மைபோலவே தம் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாரும் ஊரே யாவரும் கேளிர் என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.