#வேலூர் : 15 கி. மீ பிரசவ வலியுடன் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்.. சாலை வசதி இல்லாததால் அவதி.! 

#வேலூர் : 15 கி. மீ பிரசவ வலியுடன் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்.. சாலை வசதி இல்லாததால் அவதி.! 



Vellore women walking 15 kms for Hospital

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜார்த்தன் கொல்லை அருகே முத்தன் குடிசை கிராமத்தில் வசித்து வருகின்ற சேட்டு என்பவருக்கு சிவகாமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில் மீண்டும் சிவகாமி கர்ப்பமாகியுள்ளார்.

vellore

கடந்த ஜூன் 28ஆம் தேதி சிவகாமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி இல்லாத காரணத்தால் எந்த வாகனத்தின் மூலமாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இதனால் அந்த முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் நடந்தே சென்று பின்னர் ஆட்டோ மூலம் பாகாயம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிவகாமி. அங்கே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

vellore

நிறை மாத கர்ப்பிணியான சிவகாமி பிரசவ வலி எடுத்த பின்னும் 15 கிலோமீட்டர் நடந்து சென்று பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது மனதிற்கு சற்று ஆறுதலான விஷயமாகும்.