13 வயது சிறுமிக்கு டியூஷனில் பாலியல் தொல்லை; டியூசன் மாஸ்டர் அதிரடி கைது.!

வேலூர் மாநகர பகுதியில் டியூசன் வைத்து நடத்தி வந்தவர் மீர் பாஹர் அலி. இவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மீர் பாஹர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.