கல்லூரிக்கு போன மாணவிக்கு கழுத்தில் சதக்.. காதலிப்பதாக நடித்தவனின் சந்தேக புத்தியால் ஊசலாடும் உயிர்..!

கல்லூரிக்கு போன மாணவிக்கு கழுத்தில் சதக்.. காதலிப்பதாக நடித்தவனின் சந்தேக புத்தியால் ஊசலாடும் உயிர்..!


vellore-thiruvalam-man-murder-attempt-to-college-girl-l

தன்னைவிட்டு காதலி வேறொருவருடன் காதல் வயப்பட்டதாக எண்ணி காதலன் சந்தேக பார்வையால் பெண்ணின் உயிர் கயவனாலேயே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சோகம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் குப்தா மேட்டூர் நடுத்தெருவை சார்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). இவர் வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் பயின்று வருகிறார். இதே தெருவில் 18 வயது மாணவி கல்லூரியில் பயின்று வருகிறார். இருவரும் ஒரே தெருவில் வசிப்பதால், நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில், இன்று கல்லூரி செல்வதற்கு மாணவி பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த சதீஷ்குமார் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். மேலும், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். 

இதனால் படுகாயம் அடைந்த மாணவி இரத்த வெள்ளத்தில் சரிந்து விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர் பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியை குத்திவிட்டு தப்ப முயன்ற சதீஷா குமாரையும் பிடித்து திருவலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

கொலை முயற்சிக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், "நானும் - கல்லூரி மாணவியும் காதலித்து வந்தோம். அவள் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டதால் இவ்வாறு செய்தேன். அவர் இன்னொரு மாணவர்களுடன் அடிக்கடி பேசுகிறார். எனக்கு அவர் அந்த மாணவனை காதலிப்பதாக சந்தேகமாக இருக்கிறது. இது பற்றி கேட்டபோது தகராறு வந்தது. அதனால் கொலை செய்ய திட்டமிட்டேன்" என்று தெரிவித்துள்ளான்.