தமிழகம் இந்தியா

வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது.. அதிரடி உத்தரவு.! 

Summary:

வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி.. ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது.. அதிரடி உத்தரவு.! 

தமிழகத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசின் தேசியநெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

வானகரம், சூரப்பட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. வாகன ஓட்டிகள் அதற்கேற்றாற்போல செயல்பட்டுக்கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தமிழக அரசு மேற்கூறிய 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு கட்டணம் உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement