தமிழகம்

பள்ளி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து பயங்கர மோதல்... உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சம்பவம்.. சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு.!

Summary:

பள்ளி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து பயங்கர மோதல்... உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சம்பவம்.. சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு.!

களமருதூர் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து தினமும் மோதிக்கொள்வது வாடிக்கையாகியுள்ளது என்றும், அதனை அதிகாரிகள் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, களமருதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், பள்ளியில் உள்ள மாணவர்கள், வகுப்பு நேரம் நிறைவுபெற்று வீட்டிற்கு செல்லும் போது இரண்டு குழுவாக பிரிந்து சண்டையிடுவதாக தெரியவருகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள கடைவீதி பகுதியிலேயே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. 

மாணவர்கள் அவ்வப்போது சண்டையிடுவதை பார்க்கும் பொதுமக்களும், காவல் துறையினரும் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றனர். ஆனால், இந்த தகராறு தினமும் நடப்பது வாடிக்கையாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் மோதல் சம்பவங்களை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement