உளுந்த வடையில் ஓட்டை எதற்கு?.. இதுதான் விஷயமா?..!

உளுந்த வடையில் ஓட்டை எதற்கு?.. இதுதான் விஷயமா?..!


Uluntha Vadai Hole Mystery

நமது வாழ்க்கையில் நாம் பல விதமான வடைகளை சாப்பிட்டு இருப்போம். வீட்டில் செய்ததாகட்டும் சரி, கடையில் விரும்பி சாப்பிடுவதாகட்டும் சரி பஜ்ஜியில் தொடங்கி, போண்டா, விதவிதமான வடை என பலவற்றையும் சாப்பிட்டு மகிழ்ந்திருப்போம். 

இவற்றில் உளுந்த வடையில் மட்டும் ஓட்டை இருக்கும். இதனை திரைப்படங்களில் நகைச்சுவையாகவும் வைத்து நாம் அதனை பார்த்து சிரித்து ரசித்திருப்போம். ஆனால், பலருக்கும் அதில் உள்ள ரகசியம் இன்று வரை தெரியாமல் இருக்கும். இது அந்தந்த ஊர் வட்டாரத்திற்கு ஏற்றாற்போல உளுந்த வடை, உளுந்து வடை, ஓட்டை வடை, மெதுவடை என்று பல பெயர்களுடன் வலம்வருகிறது.

உளுந்த வடையில் ஓட்டை இருப்பதற்கு பின்னால் உள்ள ரகசியம் தெரிந்துகொள்ள இயலாதது அல்ல. உளுந்தை உருண்டையாக உருட்டி, அதனை போண்டா போல எண்ணெய் சட்டியில் போட்டு எடுத்தால், உளுந்து மாவு போண்டாவுக்கு உட்புறமாக இருக்கும் மாவை வேகவைக்க சூடேறாது. 

Tips

இதனால் போண்டாவின் நடுப்பகுதியில் இருக்கும் மாவு பச்சையாக வேகாமல் இருக்கும். இதனை வேகவைக்க நீண்ட நேரம் கடாயிலேயே வடை இருக்கும். எண்ணெய் விரயப்படும். வடையும் தீய வாய்ப்புள்ளது. 

உளுந்த வடையில் ஓட்டை போட்டு அதனை எண்ணெயில் பொரிப்பதால் அனைத்து பகுதியும் சமமாக மொறுமொறுவென வேகிறது. சாப்பிடவும் சுவையாக இருக்கிறது. உளுந்து வடை நல்ல பசியற்றியாகவும் செயல்படுகிறது. பல பேச்சுலர்களுக்கும் இதுவே காலை உணவாக அமைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.