மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற மாடலிங் மகள்! கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!
உடுப்பி அருகே 27 வயது இளம் மாடல் கிருத்தி பங்கேரா, கல்மாடியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்த அவர், சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்திருந்தார். அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேலையை விட்டுவிட்டு மாடலிங்கில் கவனம்
கிருத்தி பங்கேரா இதற்கு முன்பு மணிப்பாலில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, அதில் முழு கவனம் செலுத்த முடிவு செய்த அவர், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்தார். அதன்பிறகு கல்மாடியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 220 கோடி செலவில் நாயாகவே மாறிய கோடீஸ்வரர்! அது எப்படி? வைரலாகும் வீடியோ...!!!
அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை
சம்பவத்தன்று மதியம் கிருத்தி தனது தாயாருடன் உணவு அருந்தியுள்ளார். பின்னர் அவர் தனது அறைக்குச் சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியுள்ளனர். பதில் கிடைக்காததால் அறைக்குள் சென்று பார்த்தபோது, கிருத்தி மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மன அழுத்தம் குறித்து உறவினர்கள் தகவல்
கிருத்தி கடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்து தெளிவாக தெரியாத நிலையில், அவரது சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் மல்பே காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருத்தியின் மரணத்துக்கான காரணம் மற்றும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் மாடலிங் துறையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கிருத்தி பங்கேரா மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அதிசயமா? ஆச்சர்யமா? கோயிலில் படமெடுத்து நின்ற நள்ளாத்துப் பாம்பு...! தலையில் ஒளிரும் மணியால் பரவசத்தில் பக்தர்கள்! வைரலாகும் வீடியோ ..!!!