உடுமலை சங்கர் கொலை வழக்கு! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

உடுமலை சங்கர் கொலை வழக்கு! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!



udumalai shankar case appeals to supreme court

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.

இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு 2017 டிசம்பரில் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

udumalai

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டனர். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கெனவே சங்கரின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்துள்ளது.