செல்போன் மற்றும் பணத்தை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

செல்போன் மற்றும் பணத்தை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!


two years punishment to cellpone theft

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சிலட்டூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது மனைவியுடன் கடந்த 2018-ல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பியபோது, இவரது வீட்டில் இருந்த செல்போன் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிலட்டூரை சேர்ந்த வீரபாண்டி என்பவர் தான் தனது செல்போன் மற்றும் பணத்தை திருடியதாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வீரபாண்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.