"நீயெல்லாம் அப்பனா..." 2 வயது குழந்தை படுகொலை.!! அடித்தே கொன்ற தந்தை.!!



two-year-old-girl-brutally-killed-father-arrested

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பிஞ்சு குழந்தையை கொலை செய்து அதன் உடலை மறைத்து வைத்து நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாண்டி செல்வம் என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும் பார்கவி என்ற 2.5 வயது குழந்தையும் இருந்தது. இந்நிலையில் பாண்டி செல்வம் மற்றும் வனிதா இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ரிருக்கிறார் வனிதா. இதனைத் தொடர்ந்து வேலைக்கு செல்லும் முன்பு தனது குழந்தையை பார்த்து சென்றிருக்கிறார் பாண்டி செல்வம்.

tamilnadu

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்கச் சென்ற பாண்டி செல்வம் குழந்தையை தன்னுடன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரது மனைவியிடமிருந்து செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. மேலும் கணவன் மற்றும் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் குழந்தை அழுது கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த பாண்டி செல்வம் குழந்தையை கடுமையாக தாக்கி அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் ஆத்திரத்தில் வீசியிருக்கிறார். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதையும் படிங்க: போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி செல்வம் குழந்தையின் உடலை சாக்கு பையில் சுற்றி வேலை செய்யும் தொழிற்சாலையிலிருந்த இயந்திரத்திற்கு அடியில் வைத்து விட்டு சென்றுள்ளார். மேலும் திருமங்கலம் காவல் நிலையம் சென்று தனது குழந்தையை காணவில்லை என புகார் செய்திருக்கிறார். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இயந்திரத்தை இயக்குவதற்கு வந்த பணியாளர் துர்நாற்றம் வீசுவதையறிந்து அங்கிருந்த சாக்கு மூட்டையை எடுத்துப் பார்த்தபோது அதில் குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக திருமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரித்ததில் தனது மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தந்தையே பிஞ்சு குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: போதையால் சீரழிந்த குடும்பம்... கணவனை போட்டுதள்ளிய மனைவி.!!! போலீஸ் விசாரணை.!!