நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
பகீர்... அரசுப் பள்ளியில் குடி தண்ணீரில் விஷம்... 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.! சக மாணவர்கள் கைது.!
சேலம் அருகே அரசுப் பள்ளியில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த இரண்டு மாணவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சக மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நட்டுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பு தலைவராக இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தனது வகுப்பைச் சார்ந்த இரண்டு மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதவில்லை என ஆசிரியரிடம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதனால் வகுப்பு தலைவரின் மீது அந்த இரண்டு மாணவர்களும் கோபத்தில் இருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வகுப்பு தலைவரான அந்த மாணவரும் அவரது நண்பரும் குடிநீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது மருந்து வாசம் வந்ததாக ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சக மாணவர்கள் இரண்டு பேர் மீது குடிநீரில் விஷம் கலந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.