தமிழகம்

ஒரே நேரத்தில் இரட்டை சகோதரிகளுக்கு நேர்ந்த பயங்கரம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!

Summary:

Twin sister drowned and dead in manaparai

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சங்கம்பட்டி என்ற பகுதியில் வசித்துவந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் ராமு பிரியா மற்றும் லட்சுமி பிரியா என்ற இரட்டை மகள்கள் உள்ளனர். அவர்கள் வெள்ளபிச்சம்பட்டி அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஊரடங்களால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் அப்பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைத்து குளிக்கச்சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் தண்ணீரில் இறங்கி குளித்துக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அடுத்தடுத்தாக இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமிகள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement