உங்களின் பகல் கனவு பழிக்காது! எங்களின் பலம் என்ன தெரியுமா? டிடிவி தினகரனின் காரசார பேச்சு!

உங்களின் பகல் கனவு பழிக்காது! எங்களின் பலம் என்ன தெரியுமா? டிடிவி தினகரனின் காரசார பேச்சு!


ttv dhinakaran talk about his party


கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கணியூரில் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தினகரன் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் குழிதோண்டி புதைத்து விட்டனர். விரைவில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நாளை காணாமல் போவதைப் போல ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் காணாமல் போய்விடுவார்கள் என தெரிவித்தார்.

TTV

தொடர்ந்து பேசிய பேசிய அவர், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம். கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற தோல்வி எங்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக, அமமுக என்ற கட்சியே அழிந்துவிடும் என்று கூறுவது பகல் கனவு. தற்போதைய பலத்தின் மூலம் இன்னும் 5 தேர்தல்களை நாங்கள் சந்திப்போம். அதேபோல் கட்சியில் இருந்து வெளியேறுவது சம்பந்தபட்டவர்களின் சுயநல நடவடிக்கையால் தான். இதனால் அமமுக பலவீனம் அடைந்துவிடாது. எங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என தெரிவித்தார்..