காதல் திருமணம் செய்த மகளை காதலனின் வீடுபுகுந்து மீட்டு சென்ற பெண்தரப்பு : திருச்சியில் பரபரப்பு சம்பவம்.. காதல் கணவன் கண்ணீர் குமுறல்.!

காதல் திருமணம் செய்த மகளை காதலனின் வீடுபுகுந்து மீட்டு சென்ற பெண்தரப்பு : திருச்சியில் பரபரப்பு சம்பவம்.. காதல் கணவன் கண்ணீர் குமுறல்.!


Trichy Manapparai Love Married Girl Rescue by her Family Members 

சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்து காதலியை காதல் திருமணம் செய்த நிலையில், தகவல் அறிந்த பின்வீட்டார் திரைப்பட பாணியில் மாப்பிள்ளையின் வீட்டிற்கே சென்று பெண்ணை மீட்டு சென்ற சம்பவம் மணப்பாறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, மேட்டுப்பட்டியில் வசித்து வருபவர் கிருபாகரன் (வயது 31). இவர் மணப்பாறை அருகில் இருக்கும் ஆலத்தூர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் அழககவுண்டம்பட்டி பகுதியை சார்ந்த அழகர் என்பவரின் மகள் சிவரஞ்சனி (வயது 24) பணியாற்றி வந்துள்ளார். 

இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் கிருபாகரன் அங்கு சென்றுள்ளார். ஆனாலும், போன் மூலமாக காதலியிடம் அவ்வப்போது பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். 

Trichy District

இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் சிவரஞ்சினியின் வீட்டாருக்கு தெரியவரவே, அவருக்கு வேறொரு வரனை பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த தகவல் சிவரஞ்சனி வாயிலாக கிருபாகரனுக்கு சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன் 5-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, 6-ம் தேதியில் சிவரஞ்சினியை காதல் திருமணம் செய்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சிவரஞ்சினியின் உறவினர்கள் 15 க்கும் மேற்பட்டோர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கிருபாகரனின் வீட்டிற்கு வந்து சிவரஞ்சினியை காரில் கடத்தி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிருபாகரன் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.