மகள் வீட்டிற்கு சென்ற தாய்... வீட்டில் நடந்த திருட்டு.. ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை.!

மகள் வீட்டிற்கு சென்ற தாய்... வீட்டில் நடந்த திருட்டு.. ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை.!


Trichy Lalgudi Woman House Jewel Stolen by Thief Police Investigation Worth About Rs 1 Crore

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, மாந்துறை நெருஞ்சாலங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் ஏகாம்பரம். இவரின் மனைவி கமலா (வயது 58). ஏகாம்பரம் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக இயற்கை எய்தியுள்ளார். மாந்துறை அருகே கமலாவிற்கு சொந்தமாக திருமண மண்டபம் உள்ள நிலையில், அதனை கமலா நிர்வகித்து வருகிறார். 

இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கமலா, திருச்சி அண்ணாமலை நகரில் இருக்கும் கடைக்குட்டி மகள் விஷாலினியை பார்க்க சென்றுள்ளார். பின்னர், இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

trichy

அப்போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் நகை, ரூ.80 இலட்சம் பணம், 15 கிலோ வெள்ளி கொள்ளைபோனது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக லால்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் அதிகாரிகள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வந்தனர். மேலும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி, சி.சி.டி.வி கேமிராவையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல் என்பது தெரியவந்துள்ளது.