காதலித்த பெண்ணை கரம்பிடிக்க முடியாத வருத்தத்தில், காவலர் விஷம் குறித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்.!

காதலித்த பெண்ணை கரம்பிடிக்க முடியாத வருத்தத்தில், காவலர் விஷம் குறித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்.!


Trichy Lalgudi Cop Suresh Suicide Perambalur Lodge due to Love Failure

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புது உத்தமனூர் மேற்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரின் மகன் சுரேஷ் (வயது 31). இவர் கடந்த 2013 ஆம் வருடத்தில் காவல்துறையில் பணிக்கு சேர்ந்து, தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். 

காவல் அதிகாரி சுரேஷும், புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த கிருத்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 34) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். கிருத்திகா புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சுரேஷின் காதலுக்கு அவரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுரேஷுக்கு மற்றொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மகனை வலுக்கட்டாயப்படுத்தி திருமண நிச்சயத்தையும் பெற்றோர்கள் முடித்திருந்த நிலையில், 7 ஆம் தேதி திருமண தேதி குறிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பும் திருமண பத்திரிக்கையை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கி வந்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி ஆசிரியை கிருத்திகா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

trichy

இந்த தகவலை அறிந்த சுரேஷ் கடந்த 1 ஆம் தேதி முதலாகவே வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில், 1 ஆம் தேதி மாலை பெரம்பலூருக்கு சென்று தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கி இருந்துள்ளார். மேலும், காதலியை பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடிக்க தைரியம் வரவில்லை என்று வருந்திய சுரேஷ், விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார். 

சுரேஷின் தற்கொலையை அறிந்த அவரின் நண்பர் பழனிச்சாமி, விரைந்து சென்று சுரேஷை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தார். அதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

மருத்துவர்கள் காவல் அதிகாரிகள் சுரேஷுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரில்லாந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.