உள்ளாடைக்குள் பேஸ்ட் வடிவில் இருந்த பொருள்; தட்டிதூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்.!Trichy Airport arrived Passenger Smuggling Gold 

 

வேலை, சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்வோர், மீண்டும் தாயகம் வரும்போது அதிக அளவிலான தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாகிறது. இதில், பேஸ்ட் வடிவிலான தங்கம் பல மறைமுக வழியில் கடத்தப்பட்டாலும், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதனை எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர். 

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் வந்த பயணி, சந்தேகத்திற்க்கு இடமான வகையில் செயல்பட்டு இருக்கிறார். இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட சோதனையில் உள்ளாடைக்குள் பசை வடிவிலான தங்கம் மறைத்து கடத்தி வரப்பட்டது உறுதியானது. 

சர்ச்சைக்குரிய நபர் கடத்தி வந்த 535 கிராம் தங்கம், ரூ.33 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்புடையது ஆகும். இதனால் தங்கத்தை நபர் கடத்தி வந்தது எப்படி? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்ற விசாரணையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.