கள்ளக்காதலியை கொலை செய்து, தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்த கள்ளக்காதலன்.. திருச்சியில் அதிரவைக்கும் சம்பவம்.!

கள்ளக்காதலியை கொலை செய்து, தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்த கள்ளக்காதலன்.. திருச்சியில் அதிரவைக்கும் சம்பவம்.!


trichy-affair-man-killed-affair-woman-and-finally-he-su

பெண்ணுடன் கொண்ட கள்ளக்காதலை கைவிட இயலாத இளைஞர், பெண்ணை கொலை செய்து தானும் இரயில்வே தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், மேலகல்கண்டார்கோட்டையை சார்ந்தவர் சீனிவாசன். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி (வயது 31). தம்பதிகள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். இதே பகுதியை சார்ந்த வங்கி ஊழியர் வினோத் குமார். 

வினோத் குமாருக்கும் - புவனேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதல் ஜோடிகளிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. 

இன்று காலையில் வினோத்குமார் புவனேஸ்வரியின் வீட்டிற்கு சென்றபோது மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் போது ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற வினோத் குமார், புவனேஸ்வரியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கொலையை செய்து தப்பியோடிய வினோத் குமார், பயத்தில் பழைய மஞ்சள் திடல் இரயில்வே தண்டவாளத்தில், இரயில் வரும்போது தலைவைத்து படுத்து தற்கொலை செய்துகொண்டார். இதில், அவரின் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக பொன்மலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.