தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா! எந்த ஊரில்?

தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த 48 வயது திருநங்கைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த 48 வயதான ஒரு திருநங்கை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திருநங்கைக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
தமிழகத்தில் இதுவரை 1,828 ஆண்களும், 928 பெண்களும், ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 158 ஆண்களும், 72 பெண்களும், சென்னையை சேர்ந்த 48 வயதான ஒரு திருநங்கையும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.