தமிழகம்

மனுஷன் பாவம்!! 87 வயதில் உயிரிழந்த டிராபிக் ராமசாமி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம்!!

Summary:

டிராபிக் ராமசாமி கடைசியாக சிகிச்சை பெற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

டிராபிக் ராமசாமி கடைசியாக சிகிச்சை பெற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி அவர்கள் இன்று மரணமடைந்தார். 87 வயதாகும் அவர் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக தனது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் இன்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று தனது 87 வது வயதில் உயிரிழந்தார். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், இன்று உயிரிழந்த தகவல் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் ட்ராபிக் ராமசாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன் சிகிச்சை பெற்றுவந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement