தமிழகம்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்.!! அலரல் சத்தம் போட்ட இளைஞர்..!! பின்னர் நடந்த சோக சம்பவம்..!!

Summary:

திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்.!! அலரல் சத்தம் போட்ட இளைஞர்..!! பின்னர் நடந்த சோக சம்பவம்..!!

தண்ணீர் இல்லாத 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் டிராக்டருடன் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பொம்மேப்பள்ளியை சேர்ந்த சங்கர் (25) என்பவர்  நேற்று முன்தினம் மாலை நேரத்தில் டிராக்டரில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோட்டில் வேகமாக சென்றுள்ளார். இதனால் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து , சாலையோரம் உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்தது.

இதில் சங்கரும் டிராக்டரின் கீழ் பாகத்தில் கிணற்றுக்குள் விழுந்த நிலையில் அலறியுள்ளார். பின்னர் வலி தாங்காமல் உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பின்னர், இவரின் அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் உள்ள சங்கர் உடல் மற்றும் டிராக்டரை மீட்டனர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Advertisement