விவசாயிகள் வாழ்க்கையில் இடி விழுந்தது..! தக்காளியை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்.!

விவசாயிகள் வாழ்க்கையில் இடி விழுந்தது..! தக்காளியை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்.!


tomato rate decreased

திண்டுக்கல் அருகே வெள்ளோடு, வடமதுரை, அய்யலூர், சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தக்காளி சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. அங்கு விளையும் காய்கறிகள் அனைத்தும் திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. 

தற்போது நிலவி வரும் வறட்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்தையும் பொறுமையாக ஏற்று சாகுபடி செய்தாலும் தக்காளி விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத நிலையில் உள்ளது. தற்போது விவசாயிகள் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பொதுவாக தக்காளி வரத்து குறைவாக இருந்தால் விலை உயரும். சமீபத்தில் கிலோ  ரூபாய்க்கு மேல் விட்றது.

ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதனால், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.  விலை வீழ்ச்சி, நஷ்டம் ஏற்படுத்திய வேதனையில், விவசாயிகள் தங்களுடன் கொண்டு வந்த தக்காளி பெட்டிகளில் இருந்து அவற்றை சாலையில் கொட்டி விட்டு சென்றுள்ளனர்.