கனமழை எதிரொலி.. இன்று இம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!Today School Leave

கொட்டிதீர்த்து வரும் கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாறும் வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மிககனமழை பெய்ய வாய்ப்புள்ள 3 மாவட்டத்திற்கும் தேசிய மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

tamilnadu

கன்னியாகுமரி, வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.