BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒப்பந்த செவிலியர்களை அடியோடு நிறுத்திய தமிழ்நாடு அரசு; இன்றுமுதல் பணிக்கு வர வேண்டாம் என அறிவிப்பு.!
கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது, செவிலியர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய அன்றைய அதிமுக தலைமையிலான அரசு எம்.ஆர்.பி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணியை வழங்கியது. இவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு, கொரோனா தடுப்பு செலுத்தும் பணிகள் காரணமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் பணிகளாகும் அவசியம் கருதி நீட்டிப்பு செய்யப்பட்டது.

இவர்கள் அனைவரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, தேர்தலில் திமுக ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய கூறி கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, இன்று முதல் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களின் ஒப்பந்த காலமும் நேற்று இரவோடு நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்று முதல் பணிக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளது. பணியும் நீட்டிப்பு செய்யப்படவில்லை.