2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி..! பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் அரங்கேறிய சம்பவம்..! வைரல் வீடியோ..!
அரசு அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி..! பட்டப்பகலில் அரசு அலுவலகத்தில் அரங்கேறிய சம்பவம்..! வைரல் வீடியோ..!

தனது பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்த பெண் ஊழியருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சியில் வத்தலகுண்டுவை சேர்ந்த கோபிநாத் என்பவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும்நிலையில் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுக்க கோபிநாத்திடம் வருகிறார்.
அநேரம் பார்த்து மற்றொரு நபர் அங்கு வந்த நிலையில், அவரை அவசர அவசரமா வெளியேற்றிவிட்டு கோபிநாத் இனிப்பு வழங்கிய அந்த பெண்ணுக்கு அருகில் சென்று வேகவேகமாக முத்தம் கொடுத்துவிட்டு மீண்டும் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்கிறார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானநிலையி தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. வீடியோ வைரலானதை அடுத்து கோபிநாத் மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.