அரசியல் தமிழகம் TN Election 2021

பாவம்.!! மனுஷன் கண்கலங்கிட்டாரு..!! தாய் குறித்து பேசியதால் பிரச்சாரத்தில் கண்கலங்கிய முதல்வர்!

Summary:

பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்கலங்கியது மக்கள் மத்தியி

பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்கலங்கியது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரச்சார கூடத்தில் பேசிய திமுக கட்சியின் ஆ. ராசா அவர்கள், எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக எடப்பாடி பகுதியில் உள்ள அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிலையில் இன்று திருவொற்றியூர் பகுதியில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கலந்துகொண்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர், "என் தாயை எப்படி எல்லாம் திமுக வின் ஆ. ராசா பேசி இருக்கிறார் பாருங்கள் என சொல்லி கண்கலங்கினார். முதலமைச்சரின் தாய்யையே திமுகவினர் இப்படி பேசுகிறார்கள் என்றால், நாளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினார். ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களை போல் வளர்ந்தவன் நான். ஒரு சாமானியன் முதல்வராக வந்தால் எவ்வளவு பேச்சுக்களை வாங்க வேண்டுயிருக்கிறது என்று பாருங்கள்" என முதல்வர் கண்கலங்கினார்.

முதல்வர் இப்படி தழுதழுத்த குரலில் பேசியது அங்கிருந்த அனைவரையும் ஒருநிமிடம் உருக செய்தது என்றே கூறலாம்.


Advertisement