அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிவிப்பு; விபரம் இதோ.!
தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு போன்றவற்றால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் தரைக்காற்றுக்கான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு முதலாகவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடியவிடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வந்தது. அதேபோல, பல மாவட்டங்களிலும் இரவுகளில் கனமழை பெய்தது.
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் சென்னையை புரட்டியெடுத்த கனமழை.!
சென்னையில் மழை பெய்ய அறிவிப்பு
இந்நிலையில், காலை 10 மணிவரையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னையில் ஆலந்தூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், குன்றத்தூர், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருவெற்றியூர், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: இரவு 8 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!