தமிழகம்

நீ என்னைத்தான் காதலிக்கனும்.. 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி.. திருவண்ணாலையில் பரபரப்பு.!

Summary:

நீ என்னைத்தான் காதலிக்கனும்.. 16 வயது சிறுமி தற்கொலை முயற்சி.. திருவண்ணாலையில் பரபரப்பு.!

சிறுமிக்கு ஓட்டுநர் காதல் தொல்லை கொடுத்து வந்தால், விரக்தியடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, ஓசூரில் இருக்கும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

பள்ளி விடுமுறைக்காக சிறுமி சொந்த ஊருக்கு வந்து செல்லும் நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ஜீவானந்தம் (வயது 21) என்பவர் சிறுமியை பார்த்து ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

மேலும், சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன், நீ என்னை காதலி என்று கூறி தொல்லை கொடுத்ததும் வந்துள்ளார். ஒருசமயத்தில் சிறுமி ஜீவானந்தத்தை கண்டித்த நிலையிலும் காதல் தொல்லை கொடுத்துள்ளார்.

நீ என்னை தான் காதலிக்க வேண்டும், வேறு யாரையும் நீ காதலிக்க கூடாது என்று ஜீவானந்தம் தொல்லை கொடுக்கவே, விரக்தியடைந்த சிறுமி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

வீட்டில் மயங்கிருந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த ஜீவானந்தத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement