மின்சாரம் வைத்து 2 பேர் கொடூர கொலை.. முன்விரோதத்தால் அரங்கேறிய பயங்கர சம்பவம்.!

மின்சாரம் வைத்து 2 பேர் கொடூர கொலை.. முன்விரோதத்தால் அரங்கேறிய பயங்கர சம்பவம்.!


Tiruvannamalai Kalasapakkam 2 Killed Electric Attack Revenge Motivational Murder

முன்விரோதத்தில் மின்சாரம் வைத்து 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் கலசப்பாக்கம் அருகே நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம், சொரக்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். இதே கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர்கள் இருவருக்கும் முன்விரோத பிரச்சனை இருந்தததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ஏழுமலை, சரண்ராஜின் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, ஏழுமலையை காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. 

Tiruvannamalai

இந்த சம்பவத்தில், ரேணுகோபால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் சரண்ராஜும் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான ஏழுமலைக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.